வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
அனைத்து குடிமக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்கிட வேண்டி நகரங்கள், குடிமக்கள் குழுவினர் மற்றும் தொடக்க நிறுவனங்களை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.
அனைத்துப் பொலிவுறு நகரங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை உடைய அனைத்து நகரங்களும் இந்த சவாலிற்கு தகுதியானவையாகும்.