TReDS முறையில் பரிவர்த்தனை செய்யும் முதல் பொதுத்துறை நிறுவனம்
August 22 , 2018 2454 days 827 0
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆனது வர்த்தக ரசீதுகள் தள்ளுபடி அமைப்பு (TReDS) மேடையில் பரிவர்த்தனை செய்த முதல் பொதுத் துறை (PSU) நிறுவனமாகியுள்ளது.
இந்த பரிவர்த்தனை பரோடா வங்கி (BOB) மூலமாக நிதியுதவி செய்யப்பட்டது.
இந்த TReDS தளமானது பல நிதி நிறுவனங்களிடமிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) வர்த்தக பெறுதல்களுக்கு நிதியளிக்க உதவுவதற்கான ஒரு நிகழ்நிலை மின்னணு நிறுவன தொழில் நுட்பமாகும்.
TReDS என்பதன் விரிவாக்கம் Trade Receivables Discounting System என்பதாகும்.
அக்டோபர் 2017ல் மத்திய அரசானது சிறு, குறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கு அனைத்து பெரிய பொதுத்துறை நிறுவனங்களும் TReDS தளத்தில் இணைவதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்திய வரவுகள் பரிமாற்றம் (Receivable Exchange of India) ஆனது இந்தியாவின் முதல் TReDS தளமாகும். இது
தேசிய பங்குச் சந்தை
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றால் ஊக்குவிக்கப்படுகிறது.