TRIFED இன் வன் தன் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டம்
October 20 , 2019 2089 days 720 0
மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா என்பவர் மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பினால் (Tribal Cooperative Marketing Development Federation of India – TRIFED) ஏற்பாடு செய்யப்பட்ட “வன் தன் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டத்தைத்” தொடங்கி வைத்தார்.
நாட்டின் புகழ்பெற்ற கிராம மேலாண்மை/மேலாண்மை நிறுவனங்கள்/சமூகப் பணி நிறுவனங்கள்/சமூக சேவைகள் நிறுவனங்களிலிருந்து 18 பயிற்சியாளர்கள் இதற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
வாழ்வாதார ஊக்குவிப்பு, என்.டி.எஃப்.டி என்பதன் மீதான மதிப்புக் கூட்டல், அதைச் சந்தைப்படுத்துதல் மற்றும் அதற்கான கடன் இணைப்புகள் குறித்த TRIFEDன் நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவளிக்கும்.
சிறு வனப் பொருட்களின் ‘நியாயமான விலை’ அல்லது ‘தயாரிப்பாளர் விலை’ ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கான நெறிமுறை உள்ளிட்ட நிறுவன மேம்பாட்டிற்கான கருவிகள் மற்றும் அதற்கான நுட்பங்களை அவர்கள் உருவாக்குவார்கள்.