TNPSC Thervupettagam

TRIFED இன் வன் தன் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டம்

October 20 , 2019 2088 days 718 0
  • மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா என்பவர் மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பினால் (Tribal Cooperative Marketing Development Federation of India – TRIFED) ஏற்பாடு செய்யப்பட்ட “வன் தன் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டத்தைத்” தொடங்கி வைத்தார்.
  • நாட்டின் புகழ்பெற்ற கிராம மேலாண்மை/மேலாண்மை நிறுவனங்கள்/சமூகப் பணி நிறுவனங்கள்/சமூக சேவைகள் நிறுவனங்களிலிருந்து 18 பயிற்சியாளர்கள் இதற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • வாழ்வாதார ஊக்குவிப்பு, என்.டி.எஃப்.டி என்பதன் மீதான மதிப்புக் கூட்டல், அதைச் சந்தைப்படுத்துதல் மற்றும் அதற்கான கடன் இணைப்புகள் குறித்த TRIFEDன் நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவளிக்கும்.
  • சிறு வனப் பொருட்களின் ‘நியாயமான விலை’ அல்லது ‘தயாரிப்பாளர் விலை’ ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கான நெறிமுறை உள்ளிட்ட நிறுவன மேம்பாட்டிற்கான கருவிகள் மற்றும் அதற்கான நுட்பங்களை அவர்கள் உருவாக்குவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்