TNPSC Thervupettagam

TRRI ஆடுதுறையில் சின்டிலோமீட்டர்

November 13 , 2025 3 days 40 0
  • சின்டிலோமீட்டர் என்பது நிலப் பரப்பிற்கும் காற்றுக்கும் இடையிலான வெப்பம் மற்றும் ஈரப்பத பரிமாற்றத்தை அளவிடும் ஓர் ஒளியியல் கருவியாகும்.
  • இது ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (TRRI) நிறுவப் பட்டது.
  • இந்தக் கருவியானது, தேசியப் புவி அறிவியல் ஆய்வு மையத்தின் (NCESS) ஆதரவுடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் (TNAU) கீழ் உள்ள முக்கிய மண்டல ஆய்வகத்தின் (CZO) ஒரு பகுதியாகும்.
  • இந்த ஆய்வகம் ஆனது, 2022 ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்பட்டு வருகிறது என்பதோடு மேலும் இது தமிழ்நாட்டில் உள்ள இத்தகைய ஒரே ஆய்வகமாகும்.
  • இந்தத் தரவு நீர்ப்பாசனத் திட்டமிடல், பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் நீர் சுழற்சிகள் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற வேளாண்மை குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்