இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் முன்னணிப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘TTX – 2021’ எனப்படும் முத்தரப்பு டேபிள்டாப் என்ற ஒரு பயிற்சியில் காணொலி மூலம் பங்கேற்றனர்.
இந்தப் பயிற்சியானது போதைப்பொருள் தடுப்பு போன்ற கடல்சார் குற்றங்கள், கடல்சார் ஆய்வு மற்றும் கடல்பகுதியில் நடைபெறும் மீட்புப் பணி போன்றவற்றில் உதவுதல் ஆகியவை குறித்து மேற்கொள்ளப் பட்டது.
இந்த இரண்டு நாள் பயிற்சியானது மும்பையிலுள்ள கடல்சார் போர் மையத்தினால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது.