Co-WIN என்ற தளத்தின் வெற்றிக்குப் பிறகு, U-WIN எனப் பெயரிடப்பட்ட வழக்கமான தடுப்பூசிகளுக்கான மின்னணுப் பதிவேட்டை அமைக்க அரசாங்கம் இப்போது அதைப் பிரதியெடுத்துள்ளது.
இந்தத் திட்டம் இந்தியாவின் அணைவருக்குமான நோய்த் தடுப்புத் திட்டத்தை (UIP) டிஜிட்டல் மயமாக்குகிறது.
இது ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
நோய்த் தடுப்புச் சேவைகள், தடுப்பூசி நிலையைப் புதுப்பித்தல், அதன் வழங்குதலின் விளைவு, வழக்கமான நோய்த் தடுப்பு அமர்வுகளைத் திட்டமிடுதல் மற்றும் ஆன்டி ஜென் வாரியான வழங்குதல் போன்ற அறிக்கைகள் போன்றவற்றிற்கான முக்கியத் தகவல்களின் ஒரே ஆதாரமாக U-WIN தளம் இருக்கும்.