ஷாஜாத் பாட்டி வலையமைப்பு - UAPA சட்டத்தின் கீழ் தடை
September 18 , 2026 3 days 50 0
சட்டவிரோதச் செயல்கள் (தடுப்புச்) சட்டத்தின் (UAPA) கீழ் ஷாஜாத் பாட்டி வலை அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
வன்முறை, அமைதியின்மை மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் இந்த வலையமைப்பு ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக இந்த வலையமைப்பின் மீது குற்றம் சாட்டப் பட்டு உள்ளது.
UAPA சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அல்லது பயங்கர வாதத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்புகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
இதன் மூலம் இந்தியாவில் இந்த வலையமைப்பின் சொத்துக்களை முடக்கவும், அதற்கான நிதியுதவி அல்லது ஆதரவைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.