UDAN-3ன் கீழ் முதல் கடலில் தரையிறங்கும் விமானங்களை இயக்கும் முதல் தீவு
January 10 , 2019 2398 days 729 0
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகமானது UDAN-3 திட்டத்தின் கீழ் அந்தமான் தீவுகளில் கடலில் தரையிறங்கும் விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது.
இதன்மூலம் கடலில் தரையிறங்கும் விமானங்களை இயக்கும் முதல் இந்திய தீவாக அந்தமான் ஆகியுள்ளது.
கேம்பல் விரிகுடா, கார் நிகோபார் ஹேவ்லாக், ஹட்பே நெயில், லாங் தீவு மற்றும் திக்லிபூர் ஆகிய அந்தமான் தீவுகள் கடலில் தரையிறங்கும் விமானங்கள் மூலம் இணைக்கப்படும்.
மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் ஆகிய இடங்களில் பொதுவாக இயக்கப்படும் கடல் விமானங்களின் இயக்கமானது அரசின் லட்சிய பிராந்திய இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.