TNPSC Thervupettagam

UDAN திட்டத்தின் ஐந்தாவது சுற்று

April 26 , 2023 834 days 364 0
  • UDAN எனப்படும் பிராந்திய விமானச் சேவை வழங்கீட்டுத் திட்டத்தின் ஐந்தாவது சுற்றினை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
  • இது நாட்டின் தொலைதூர மற்றும் பிராந்திய பகுதிகளுக்கான விமானச் சேவை வழங்கீட்டினை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சுற்றில் வகை-2 (20-80 இருக்கைகள் கொண்ட விமானங்கள்) மற்றும் வகை-3 (80க்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட விமானங்கள்) ஆகியவற்றின் விமானச் செயல்பாடுகள் மட்டுமே உள்ளடங்கும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், சேவை தூரமானது 600 கி.மீ. வரை மட்டுமே என்று விதிக்கப்பட்டு இருந்த வரம்பானது விலக்கப்பட்டதோடு, இதில் விமானத்தின் தொடக்க இடம் மற்றும் சென்றடையும் இடங்களுக்கு இடையேயான தூரத்திற்கு எந்த வரம்பும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்