கல்வி அமைச்சகமானது, ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) 2024-25 அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2022-23 மற்றும் 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2024–25 ஆம் கல்வியாண்டில், ஆரம்ப நிலை, இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி நிலைகளில் இடைநிற்றல் விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.
2024-25 ஆம் ஆண்டில் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட 1.92 கோடி மாணாக்கர்களில், 80% (1.54 கோடி மாணவர்கள்) அதே பள்ளியிலோ அல்லது வேறு பள்ளியிலோ அல்லது அங்கன்வாடி மையத்திலோ பள்ளிக் கல்விக்கு முந்தைய அனுபவத்தைக் கொண்டிருந்தனர்.
இது 2023-24 ஆம் ஆண்டில் 73% ஆக இருந்தது, தற்போது 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட 1.87 கோடி மாணாக்கர்களில் சுமார் 1.37 கோடி பேர் பள்ளிக் கல்விக்கு முந்தைய அனுபவத்தைக் கொண்டிருந்தனர்.
2024–25 ஆம் கல்வியாண்டில், அடிப்படை, ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலை என அனைத்து கல்வி நிலைகளிலும் மாணாக்கர் சேர்க்கை தக்கவைப்பில் நேர்மறையான போக்கு காணப்படுகிறது.
முந்தைய ஆண்டை விட மாணாக்கர் சேர்க்கை தக்கவைப்பு விகிதங்கள் கணிசமாக மேம்பட்டுள்ளன, இது
அடிப்படை கல்வி மட்டத்தில் 98.0 சதவீதத்திலிருந்து 98.9% ஆகவும்,
ஆரம்ப நிலையில் 85.4 சதவீதத்திலிருந்து 92.4% ஆகவும்,
இடை நிலையில் 78.0 சதவீதத்திலிருந்து 82.8% ஆகவும்,
உயர் நிலையில் 45.6 சதவீதத்திலிருந்து 47.2% ஆகவும் அதிகரித்துள்ளது.
2024–25 ஆம் கல்வியாண்டில் இடைநிலை மற்றும் உயர்நிலை மட்டங்களில் மொத்த சேர்க்கை விகிதத்தில் (GER) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
2023–24 ஆம் ஆண்டில் 89.5% ஆக இருந்த இடைநிலை அளவிலான GER 90.3% ஆகவும், உயர் நிலை மட்டத்தில் 66.5 சதவீதத்திலிருந்து 68.5% ஆகவும் உயர்ந்துள்ளது.
அடிப்படை நிலையிலிருந்து ஆரம்ப நிலை கல்வியிலான மாறுதல் விகிதம் 98.1% சதவீதத்திலிருந்து 98.6% ஆகவும், ஆரம்ப நிலை முதல் இடைநிலை கல்விக்கான மாறுதல் விகிதம் 88.8 சதவீதத்திலிருந்து 92.2% ஆகவும், இடைநிலையிலிருந்து உயர்நிலைக்கான மாறுதல் விகிதம் 83.3 சதவீதத்திலிருந்து 86.6% ஆகவும் மேம்பட்டுள்ளது.
ஒற்றை ஆசிரியர் மட்டுமே கொண்ட பள்ளிகள் முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 6% குறைந்துள்ளன.
இதே போல், எந்தவொரு சேர்க்கை விகிதமும் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 38% ஆகக் குறைந்துள்ளது.
2023–24 ஆம் ஆண்டில் 57.2% ஆக இருந்த கணினி அணுகல் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு 64.7% ஆக உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டில் 53.9% ஆக இருந்த இணைய இணைப்பு உள்ள பள்ளிகளின் சதவீதம் ஆனது 63.5% ஆக அதிகரித்துள்ளது.
இன்று, 93.6% பள்ளிகளில் மின்சாரம் உள்ளது, 97.3% பள்ளிகளில் பெண்கள் கழிப்பறைகள் உள்ளன, மற்றும் 96.2% பள்ளிகளில் ஆண்கள் கழிப்பறைகள் உள்ளன - இது அனைத்து மாணாக்கர்களுக்குமான கண்ணியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்கிறது.
தற்போது 95.9% பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் உள்ளன என்பதோடு மேலும் பாதுகாப்பான குடிநீர் அணுகல் 99.3% அளவினை எட்டியுள்ளது.
தற்போது மொத்தக் கற்பித்தல் பணியாளர்களில்/ஆசிரியர்களில் பெண்கள் 54.2% பங்கினைக் கொண்டுள்ளதுடன், 2024–25 ஆம் கல்வியாண்டில் பெண் ஆசிரியர்களின் பிரதிநிதித்துவமும் அதிகரித்துள்ளது.