மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங் அவர்கள் 2019-2020 ஆம் ஆண்டிற்கான கல்விக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட அளவிலான தகவல் அமைப்பு பிளஸ் அறிக்கையினை (Unified District Information System for Education Plus – UDISE +) வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையானது இந்தியப் பள்ளிக்கல்வி முறை குறித்த நேர்மறை மற்றும் எதிர்மறையான சில சுவாரஸ்யம் மிக்க உண்மைத் தகவல்களை எடுத்துரைத்து உள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2019-20 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மொத்த மாணாக்கர் சேர்க்கையானது 13.01 கோடியாகவும் மாணவிகள் சேர்க்கையானது 12.08 கோடியாகவும் இருந்தது.