வரலாற்றில் முதல்முறையாக, UDISE+ அறிக்கையின்படி, 2024-25 ஆம் கல்வியாண்டில் இந்தியாவின் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.
இது 2022-23 ஆம் கல்வியாண்டுடன் ஒப்பிடும் போது ஆசிரியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள 6.7% அதிகரிப்பைக் குறிக்கிறது.
இந்தியாவில் தற்போது சுமார் 15 லட்சம் பள்ளிகளும், 24 கோடிக்கும் மேற்பட்ட மாணாக்கர்களும் உள்ளனர்.
தோராயமாக 50% மாணாக்கர்கள் அரசுப் பள்ளிகளிலும், 41% பேர் தனியார் பள்ளிகளிலும், மீதமுள்ளவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சேர்ந்துள்ளனர்.
ஆசிரியர்கள் பிரிவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது என்பதோடு பள்ளி ஆசிரியர்களில் 54.3 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்.
பள்ளிகளில் பெண்களின் சேர்க்கை 48.3 சதவீதத்தினை எட்டியுள்ளது.
மாணாக்கர்-ஆசிரியர் விகிதம் (PTR) அனைத்து கல்வி நிலைகளிலும் மேம்பட்டுள்ளது என்பதோடு அடித்தளம், தயார்படுத்துதல், நடுநிலை மற்றும் இடைநிலைக் கல்வி நிலைகளுக்கு PTR முறையே 10, 13, 17 மற்றும் 21 ஆக உள்ளது.