உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்க, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய விதிமுறைகளை அறிவித்தது.
இந்த விதிமுறைகள் பல்கலைக்கழக மானியக் குழு (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) விதிமுறைகள், 2026 என்று பெயரிடப்பட்டுள்ளன.
இந்த விதிகள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் கீழ் பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs), பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (STs) மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) ஆகியோரை உள்ளடக்கியது.
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கட்டாயச் சமூகப் பிரதிநிதித்துவத்துடன் சம வாய்ப்பு மையங்கள் (EOC) மற்றும் சமத்துவக் குழுக்களை நிறுவ வேண்டும்.
இந்த விதிமுறைகளைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிட UGC ஒரு தேசிய அளவிலான கண்காணிப்புக் குழுவை உருவாக்கும்.
இணங்கத் தவறிய நிறுவனங்கள் UGC அங்கீகாரம், திட்டங்கள் அல்லது பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குவதற்கான ஒப்புதலை இழக்க நேரிடும்.