TNPSC Thervupettagam

UGCயின் மொழிக் கொள்கை குறித்த அறிவிப்பு

January 30 , 2026 17 hrs 0 min 6 0
  • உயர்கல்வி நிறுவனங்களில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) சுற்றறிக்கைக்குத் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • இந்தச் சுற்றறிக்கை, மாநிலம் நீண்ட காலமாகப் பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது என்று மாநில அரசு கூறியுள்ளது.
  • 1968 முதல் தமிழ்நாடு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டத்தைப் பின்பற்றி வருகிறது.
  • தமிழ்நாடு அரசானது, தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் கீழ் முன்மொழியப் பட்ட மும்மொழித் திட்டத்தை நிராகரித்தது.
  • கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இருப்பதால், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
  • முன்னதாக, 2022ல், மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தியைப் பரப்புவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு சட்டமன்றம் எதிர்த்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்