ஆதார் அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) முதல் முறையாக 'பக் பவுண்டி' எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
UIDAI டிஜிட்டல் தளங்களில் உள்ள பாதிப்புகள் மற்றும் மறைந்திருக்கும் அபாயங்களைக் கண்டறிய இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் அறநெறிசார் ஊடுருவலாளர்கள் ஆகியோர்களை இந்தத் திட்டம் அழைப்பு விடுக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 20 பாதுகாப்பு ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளம், myAadhaar தளம் மற்றும் பாதுகாப்பான QR குறியீடு செயலி போன்ற அமைப்புகளை ஆய்வு செய்வார்கள்.
இது பாதுகாப்பு குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய உதவுவதுடன் தரவுக் கசிவுகளைத் தடுத்து தனிப்பட்ட அடையாளத் தரவுகளின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.