November 26 , 2018
2510 days
821
- ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் நடைபெற்ற UIM (Union Internationale Motonautique) FIH2O கிராண்ட் பிரிக்ஸில் அபுதாபியின் அணியின் ஷான் டோரண்டி அணி வெற்றி பெற்றுள்ளார்.
- இது மோட்டார் படகுப் போட்டியில் 5-வது சுற்றாகும் (Power boat).
- இவ்வெற்றியானது ஷான் டோரண்டியின் 7-வது வாழ்நாள் வெற்றியாகும். அவர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் தரநிலைகளில் முன்னிலை இடத்தை நோக்கி முன்னேறி இருக்கின்றார்.
- இந்த பந்தயத்தில் பங்கு பெற்ற ஒரேயொரு பெண் பந்தயக் குழுவான அமீரகத்தைச் சேர்ந்த மரீட் ஸ்ட்ரோமோ என்ற அணியால் இரண்டாவது இடம் அடையப் பட்டுள்ளது.
- இப்போட்டியில் அபுதாபியைச் சேர்ந்த எரிக் ஸ்டார்க் அணியால் மூன்றாவது இடம் பிடிக்கப் பட்டுள்ளது.
- இந்தியாவால் நடத்தப்பட்ட முதலாவது FIH2O கிராண்ட் பிரிக்ஸ் இதுவாகும்.
Post Views:
821