தமிழ்நாட்டின் 4வது முதன்மையான உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க உச்சி மாநாடான UmagineTN 2026 நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கப் புதுமையாளர்கள், முதலீட்டாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒரே தளத்திற்கு கொண்டு வருவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
இதன் முக்கிய கருத்துரு செயற்கை நுண்ணறிவு, தொடர் சங்கிலித் தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பம், இணையவெளிப் பாதுகாப்பு மற்றும் AVGC-XR (இயங்கு படம், மெருகூட்டப்பட்ட காட்சிகள், விளையாட்டு, கேளிக்கைச் சித்திரங்கள்- உள்ளார்ந்த மெய்நிலைக் காட்சிகள்) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது.
இதில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும் பகுதிகளில் உள்ளர்ந்தத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துதல், டிஜிட்டல் பொது உள் கட்டமைப்பு, அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான இணையவழி ஆளுகை, தரவு சார் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) ஆகியவை அடங்கும்.