TNPSC Thervupettagam

UMEED மத்திய இணைய தளம்

June 10 , 2025 6 days 33 0
  • வக்ஃப் வாரியத்தின் அனைத்து சொத்துக்களைப் புவிசார் குறியிட்ட பிறகு எண்ணிமப் பதிவுகளை உருவாக்கும் UMEED இணைய தளத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
  • UMEED மத்திய இணைய தளமானது ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1995 என்பதன் சுருக்கமாகும்.
  • இது வக்ஃப் சொத்துக்களின் நிகழ்நேர அளவிலான பதிவேற்றம், சரி பார்ப்பு மற்றும் கண்காணிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட எண்ணிமத் தளமாக செயல்படும்.
  • மிகவும் சிறப்பான பதில் நடவடிக்கை மற்றும் வெளிப்படையான குத்தகை மற்றும் பயன்பாட்டு கண்காணிப்புக்கான இயங்கலை வழி குறை தீர்ப்பு முறையையும் இது உள்ளடக்கியுள்ளது.
  • இந்த இணைய தளமானது, புவியியல் தகவல் முறைமை (GIS) வழி வரைபடமாக்கல் மற்றும் பிற வகையான இணைய ஆளுகை கருவிகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் சரிபார்க்கப்பட்ட பல்வேறு பதிவுகள் மற்றும் அறிக்கைகளுக்கான பொது அணுகலை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்