வக்ஃப் வாரியத்தின் அனைத்து சொத்துக்களைப் புவிசார் குறியிட்ட பிறகு எண்ணிமப் பதிவுகளை உருவாக்கும் UMEED இணைய தளத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
UMEED மத்திய இணைய தளமானது ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1995 என்பதன் சுருக்கமாகும்.
இது வக்ஃப் சொத்துக்களின் நிகழ்நேர அளவிலான பதிவேற்றம், சரி பார்ப்பு மற்றும் கண்காணிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட எண்ணிமத் தளமாக செயல்படும்.
மிகவும் சிறப்பான பதில் நடவடிக்கை மற்றும் வெளிப்படையான குத்தகை மற்றும் பயன்பாட்டு கண்காணிப்புக்கான இயங்கலை வழி குறை தீர்ப்பு முறையையும் இது உள்ளடக்கியுள்ளது.
இந்த இணைய தளமானது, புவியியல் தகவல் முறைமை (GIS) வழி வரைபடமாக்கல் மற்றும் பிற வகையான இணைய ஆளுகை கருவிகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் சரிபார்க்கப்பட்ட பல்வேறு பதிவுகள் மற்றும் அறிக்கைகளுக்கான பொது அணுகலை உள்ளடக்கியது.