ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் 1267 தடைகள் குழுவின் கீழ் சமீபத்திய கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் The Resistance Front (TRF) அமைப்பு குறிப்பிடப் பட்டுள்ளது.
தீவிரவாதத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிரான பல்வேறு தடைகளை இந்தக் குழு மேற்பார்வையிடுகிறது.
இது 1999 ஆம் ஆன்டில் அல்-கொய்தாவை இலக்காக வைத்து நிறுவப்பட்டது, பின்னர் மற்ற தீவிரவாத குழுக்களை உள்ளடக்குவதற்காகவும் விரிவுபடுத்தப்பட்டது.
சொத்து முடக்கம், பயணத் தடைகள் மற்றும் ஆயுதத் தடைகள் உள்ளிட்ட தடைகள் பட்டியலை இந்தக் குழு பேணுகிறது.
லஷ்கர்-இ-தைபா மற்றும் The Resistance Front போன்ற குழுக்களுக்கு எதிரான சர்வதேச முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் இந்தக் குழு முக்கியப் பங்கு வகிக்கிறது.