TNPSC Thervupettagam

UN CFT ஒப்பந்தம் - ஈரான்

October 28 , 2025 15 hrs 0 min 26 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒடுக்குவதற்கான சர்வதேச உடன்படிக்கையில் (CFT) இணைய ஈரான் ஒரு சட்டத்தை அங்கீகரித்துள்ளது.
  • தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதில் பல்வேறு உலகளாவியத் தரநிலைகளுடன் ஈரானை இணைக்க அதிபர் மசூத் பெஷேஷ்கியன் இந்தச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
  • சர்வதேச வங்கிக்கான அணுகலை மேம்படுத்துதல், வர்த்தகக் கட்டுப்பாடுகளை எளிதாக்குதல் மற்றும் தடைகளால் பாதிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகள் சார்ந்த நெருக்கடிகளைக் குறைத்தல் ஆகியவற்றை ஈரான் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • உடன்படிக்கைக்கு இணங்காததால் வட கொரியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுடன் சேர்த்து, 2020 ஆம் ஆண்டு முதல் ஈரான் நிதியியல் நடவடிக்கை பணிக் குழுவின் (FATF) கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • ஈரான் நாடு வரலாற்று ரீதியாக அமெரிக்காவால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ், ஹெஸ்பொல்லா மற்றும் ஹவுத்திகள் உள்ளிட்ட குழுக்களை ஆதரித்து வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்