TNPSC Thervupettagam
August 2 , 2025 14 hrs 0 min 27 0
  • 2025 ஆம் ஆண்டு உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை (SOFI) அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் பின்வரும் ஐந்து நிறுவனங்களால் வெளியிடப் படுகிறது:
    • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO),
    • சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதி (IFAD),
    • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF),
    • உலக உணவுத் திட்டம் (WFP), மற்றும்
    • உலக சுகாதார அமைப்பு (WHO).
  • இந்த அறிக்கையானது நிலையான மேம்பாட்டு இலக்குகளின் இரண்டாவது இலக்கின் (SDG 2) முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது.
  • SDG 2 என்பது பட்டினி நிலையை முடிவுக்குக் கொண்டு வருதல், ஆண்டு முழுவதும் பாதுகாப்பான, சத்தான மற்றும் போதுமான உணவுக் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில், 2024 ஆம் ஆண்டில் 55.6% மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
  • உலகளவில், 2024 ஆம் ஆண்டில் சுமார் 720 மில்லியன் மக்கள் அதாவது மக்கள் தொகையில் சுமார் 8.2% பேர் பட்டினி நிலையால் பாதிக்கப்பட்டனர்.
  • 2024 ஆம் ஆண்டில் சுமார் 2.3 பில்லியன் மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர்.
  • ஆசியாவில் 323 மில்லியன் என்ற அளவில் அதிக எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் இருந்தனர்.
  • அதனையடுத்து 307 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களுடன் ஆப்பிரிக்கா இடம் பெற்றது.
  • இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 34 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் இருந்தனர்.
  • ஆப்பிரிக்காவில் 5 பேரில் 1 பேருக்கும் அதிகமானோர் 2024 ஆம் ஆண்டில் நாள்பட்ட பட்டினி நிலையை  எதிர்கொண்டனர்.
  • ஆசியாவின் மக்கள்தொகையில் சுமார் பாதி பேர் உணவுப் பாதுகாப்பின்மையில் வாழ்ந்தனர். ஆனால் உணவுப் பாதுகாப்பின்மை விகிதங்கள் ஆப்பிரிக்காவில் மிகவும் அதிகமாக இருந்தன.
  • 2030 ஆம் ஆண்டில், 512 மில்லியன் மக்கள் (உலக மக்கள்தொகையில் 6%) இன்னும் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கலாம் என்று இந்தக் கணிப்புகள் மதிப்பிடுகின்றன.
  • 2030 ஆம் ஆண்டில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்களில் 60% பேர் ஆப்பிரிக்காவில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அந்நாட்டின் மக்கள் தொகையில் 17.6% பேர் நாள்பட்ட பட்டினி நிலையை எதிர்கொள்வார்கள்.
  • ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா/கரீபியன் நாடுகளில், ஊட்டச்சத்துக் குறைபாடு ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்