TNPSC Thervupettagam

UN உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2024

March 29 , 2024 31 days 151 0
  • நன்னீர்ப் பயன்பாடு ஆனது ஆண்டிற்கு 1 சதவீதத்திற்கும் குறைவான விகிதத்திலேயே அதிகரித்து வருகிறது.
  • நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நன்னீர் பயன்பாட்டில் வேளாண்மையானது மிக தோராயமாக 70% பங்கினைக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து தொழில்துறை (20%) மற்றும் வீட்டு உபயோகம் (10%) சார்ந்த பயன்பாடுகள் தண்ணீர்த் தேவையை அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகள் ஆகும்.
  • உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் ‘மிக அதிக’ அளவிலான தண்ணீர் நெருக்கடியினை (பற்றாக்குறையினை) எதிர்கொள்கின்றனர்.
  • அதிக வருமானம் உள்ள நாடுகளில், வேளாண்மையில் வீணடிக்கப்படும் நீர் மிகவும்  தீவிரமான பிரச்சனையாக உள்ளது.
  • கவலை கொள்ள வைக்கும் வகையில் வளர்ந்து வரும் மாசுபாடுகளில், பெர்- மற்றும் பாலி-ஃபுளோரோஅல்கைல் கூறுகள் (PFAS), மருந்துகள், ஹார்மோன்கள், தொழில் துறை இரசாயனங்கள், சலவைப் பொருட்கள், சயனோடாக்சின்கள் மற்றும் நுண் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
  • சரியான முறையில் சுத்திகரிக்கப்படாத வீட்டுக் கழிவு நீர், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றிலிருந்து உருவாகும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிக அதிகச் செறிவுகள் ஆனது அனைத்துப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்