"Shifting Paradigms: United to Deliver" அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
3ம் செயல்பாட்டுத் தொடர் அறிக்கையானது ஐ.நா. செயல்திறன் மற்றும் தாக்கத்தை மேம்படுத்துவதற்காக கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் திட்ட மறு சீரமைப்புகளை முன்மொழிகிறது.
முக்கியச் சீர்திருத்தங்களில் UNDP போன்ற நிறுவனங்களை ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் அலுவலகத்துடன் (UNOPS) இணைப்பது மற்றும் அமைதி, பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் பணிகளை வலுப்படுத்துவது ஆகியவை அடங்கும்.
ஒருங்கிணைக்கப்பட்ட வெவ்வேறு மாற்றங்கள் உலகளாவிய, பிராந்திய மற்றும் உலக நாடுகள் மட்டங்களில் ஒருங்கிணைப்பைச் செயலாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளன.
தொழில்நுட்ப மேம்பாட்டுத் தளம் மற்றும் பகிரப்பட்டச் சேவைகள், செயல்பாடுகளை நவீனமயமாக்கும் மற்றும் செலவுகளைக் குறைக்கும்.
இந்த அறிக்கையானது ஐ.நா. சாசனத்துடன் இணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மதிப்பிடக் கூடிய மேம்பாடுகளை வலியுறுத்துகிறது.