11வது ஐக்கிய நாடுகளின் நாகரிகங்களின் கூட்டணி (UNAOC) மன்றக் கூட்டம் ஆனது சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்றது.
வாசுதேவக் குடும்பகம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா இந்த மன்றத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த நிகழ்வின் முக்கிய கருத்துரு "UNAOC: Two Decades of Dialogue for Humanity — Advancing a New Era of Mutual Respect and Understanding in a Multipolar World" என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், ஸ்பெயின் மற்றும் துருக்கியின் இணை நிதியுதவியுடன், 2005 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதியன்று UNAOC கூட்டணியை நிறுவினார்.
UNAOC மன்றத்தின் தலைமையகம் மற்றும் செயலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
இந்த மன்றம் UNAOC மன்றத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்ற நிலையில்நிலையான அமைதிக்கான அதன் எதிர்காலப் பாதையைத் திட்டமிடுவதில் அது கவனம் செலுத்துகிறது.