பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCCD) 17-வது தரப்பினரின் மாநாடு (COP17) மங்கோலியாவின் உலான்பாதரில் தொடங்கியது.
ரியாத்தில் நடைபெற்ற COP16 மாநாட்டில் சட்டப்பூர்வமாக பிணைக்கக்கூடிய ஒப்பந்தத்தில் உடன்படத் தவறியதைத் தொடர்ந்து, உலகளாவிய வறட்சிக் கட்டமைப்பு குறித்து நாடுகள் தற்போது விவாதித்து வருகின்றன.
உலகளவில் 1.5 முதல் 2 பில்லியன் ஹெக்டேர் நிலம் சீரழிந்துள்ளதாக மதிப்பிடப் பட்டு உள்ள நிலையில், சுமார் 1 பில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்க நாடுகள் உறுதியளித்துள்ளன.
இந்த மாநாடு வறட்சி மற்றும் நில சீரழிவைச் சமாளிப்பதற்கான நிதி, தொழில்நுட்பம் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
தமது நாட்டின் நிலப்பரப்பில் 77 சதவீதம் பாலைவனமாதல் மற்றும் நில சீரழிவால் பாதிக்கப் பட்டுள்ளதாக மங்கோலியா தெரிவித்துள்ளது.