TNPSC Thervupettagam

UNCCD COP17 – மங்கோலியா

August 20 , 2026 6 days 101 0
  • பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCCD) 17-வது தரப்பினரின் மாநாடு (COP17) மங்கோலியாவின் உலான்பாதரில் தொடங்கியது.
  • ரியாத்தில் நடைபெற்ற COP16 மாநாட்டில் சட்டப்பூர்வமாக பிணைக்கக்கூடிய ஒப்பந்தத்தில் உடன்படத் தவறியதைத் தொடர்ந்து, உலகளாவிய வறட்சிக் கட்டமைப்பு குறித்து நாடுகள் தற்போது விவாதித்து வருகின்றன.
  • உலகளவில் 1.5 முதல் 2 பில்லியன் ஹெக்டேர் நிலம் சீரழிந்துள்ளதாக மதிப்பிடப் பட்டு உள்ள நிலையில், சுமார் 1 பில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்க நாடுகள் உறுதியளித்துள்ளன.
  • இந்த மாநாடு வறட்சி மற்றும் நில சீரழிவைச் சமாளிப்பதற்கான நிதி, தொழில்நுட்பம் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • தமது நாட்டின் நிலப்பரப்பில் 77 சதவீதம் பாலைவனமாதல் மற்றும் நில சீரழிவால் பாதிக்கப் பட்டுள்ளதாக மங்கோலியா தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்