2021 ஆம் ஆண்டின் 3வது காலாண்டுப் பகுதியில் உலக நாடுகளின் பொருள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளின் மதிப்பானது 5.6 டிரில்லியன் டாலரை எட்டியது.
இது காலாண்டுப் பகுதியில் எட்டப்பட்ட ஒரு புதிய சாதனை என்று UNCTAD அறிக்கை கூறுகிறது.
இந்த அமைப்பின் நவம்பர் மாத உலக வர்த்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புதிய கணிப்புகளானது, சரக்குகள் மற்றும் சேவைகளின் வர்த்தகம என்பது ஆண்டிற்கு 28 டிரில்லியன் டாலரை எட்டுவதாக கூறுகின்றன.
இது 2020 ஆம் ஆண்டிலிருந்ததை விட 23 சதவீதமும், கோவிட் – 19 பெருந்தொற்றிற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும் பொழுது 11 சதவீதமும் அதிகமாகும்.