கோஸ்டா ரிக்கா நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுநரான ரெபேகா கிரின்ஸ்பன் என்பவரை ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பினுடைய (UNCTAD – United Nations Conference on Trade And Development) பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
UNCTAD அமைப்பிற்குத் தலைமை தாங்க உள்ள முதல் பெண்மணியும் முதல் மத்திய அமெரிக்க குடிமகளும் இவரே ஆவார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் அவர்கள் இவரை UNCTAD அமைப்பின் பொதுச் செயலாளராக நியமனம் செய்தார்.