ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மன்ற அமைப்பானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையில், நாடுகளுக்கிடையே சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தை அனுமதிக்கும் 6 நாடுகளுள் ஒன்றாக பிலிப்பைன்ஸ் நாட்டினை UNCTAD அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மற்ற 5 நாடுகள் : கனடா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.
இந்த நாடுகள் தகவல் பரிமாற்றத்திற்காக ‘இலகுமுறையிலான அணுகுமுறையை’ கையாளுகின்றன.
நாடுகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கான “கட்டுப்பாடுமிக்க” அல்லது “பாதுகாக்கப்பட்ட” அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது.