TNPSC Thervupettagam

UNCTAD வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை 2026

October 14 , 2026 10 days 110 0
  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD), அதிகாரப் பூர்வ மேம்பாட்டு உதவி (ODA) 2026 ஆம் ஆண்டில் 6.9% குறைந்து 152 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது, இது 2014 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மிகக் குறைந்த அளவாகும்.
  • 2024 ஆம் ஆண்டில் 8.5% மற்றும் 2025 ஆம் ஆண்டில் 23.3% என்ற வீழ்ச்சியைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ODA குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 0.7% என்ற சர்வதேச இலக்கிற்கு எதிராக, நிதியளிக்கும் நாடுகளின் ஒருங்கிணைந்த மொத்த தேசிய வருமானத்தில் (GNI) ODA 0.23% ஐ எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2.6% ஆக இருக்கும் என இந்த அறிக்கை கணித்துள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி 7.3% ஆக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய கட்டமைப்புகளுக்கான முதலீட்டில் உத்திசார் துறைகள் 44% பங்கைக் கொண்டிருந்தன; இவற்றில் குறைக்கடத்திகள், ஆற்றல்-மாற்றத் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
  • இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், எரிசக்தி-விலை அதிர்ச்சிகளிலிருந்து நாடுகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு வழியாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை UNCTAD முன்னிலைப் படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்