TNPSC Thervupettagam
January 26 , 2026 14 hrs 0 min 27 0
  • ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு இயற்கைக்கான நிதி நிலை 2026 அறிக்கையை வெளியிட்டது.
  • இது இயற்கைக்கு எதிர்மறையான மற்றும் இயற்கைக்கு நேர்மறையான நிதிக்கு இடையிலான உலகளாவிய ஏற்றத்தாழ்வை எடுத்துக்காட்டுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில், இயற்கைக்கு எதிர்மறையான நிதி சுமார் 7.3 டிரில்லியன் டாலர்களை எட்டிய அதே நேரத்தில் இயற்கை சார்ந்த தீர்வுகளில் முதலீடு சுமார் 220 பில்லியன் டாலர்களாக இருந்தது.
  • தனியார் நிதி புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் கனரகத் தொழில்துறையில் குவிந்து உள்ளதுடன், இயற்கை சார்ந்தத் தீர்வுகளுக்கான நிதியில் கிட்டத்தட்ட 90% பொது மூலங்களில் இருந்து வருகிறது.
  • ரியோ உடன்படிக்கை இலக்குகளை அடைய, இயற்கை சார்ந்த தீர்வுகளில் ஆண்டு முதலீடு 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 571 பில்லியன் டாலர்களாக உயர வேண்டும்.
  • தீங்கு விளைவிக்கும் செயல்களிலிருந்து மூலதனத்தைத் திசை திருப்புதல், சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மானியங்களை சீர்திருத்துதல், இயற்கை-இடர் வெளிப் படுத்தல்களைக் கட்டாயமாக்குதல் மற்றும் கலப்பு நிதியை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்