COP30 மாநாட்டின் போது UN சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு 2025 ஆண்டு உலகளாவிய மீத்தேன் நிலை அறிக்கையை வெளியிட்டது.
2020 ஆம் ஆண்டில் உலகளாவிய மீத்தேன் உமிழ்வு சுமார் 352 மில்லியன் டன்களாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது.
தற்போதைய நிலைமைகளின் கீழ் 2030 ஆம் ஆண்டில் உமிழ்வு சுமார் 369 மில்லியன் டன்களாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உலகளாவிய மீத்தேன் உமிழ்வில் வேளாண்மை சுமார் 42% பங்களிக்கிறது.
தற்போதைய தேசிய உறுதிப்பாடுகள் 2030 ஆம் ஆண்டிற்குள் 2020 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 8 சதவீதம் உமிழ்வைக் குறைக்கலாம்.
தற்போது கிடைக்கக் கூடிய அனைத்து உமிழ்வுக் குறைப்பு வாய்ப்புகளையும் செயல் படுத்துவதன் மூலம், உலகளாவிய மீத்தேன் உறுதிப்பாடு இலக்கிற்கு ஏற்ப, 2030 ஆம் ஆண்டிற்குள் உமிழ்வை சுமார் 32 சதவீதம் குறைக்கலாம்.