TNPSC Thervupettagam

UNEP-யின் உலகளாவிய கட்டிடங்கள் அறிக்கை

May 26 , 2026 4 days 66 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP) "கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான உலகளாவிய நிலை அறிக்கை 2025-2026"-இன் 10-வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • இதில் இத்துறை 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை எட்டும் பாதையிலிருந்து விலகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
  • உலகளாவிய கார்பன் உமிழ்வில் 37% மற்றும் உலகளாவிய மூலப்பொருள் பிரித்தெடுப்பில் கிட்டத்தட்ட 50% கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத் துறையாலேயே ஏற்படுகிறது.
  • கட்டிடங்களின் செயல்பாட்டு உமிழ்வுகள் 2024-ஆம் ஆண்டில் 9.9 கிகா டன் கார்பன் டை ஆக்சைடாக (GtCO) அதிகரித்துள்ளதுடன் மேலும் பருவநிலை இலக்குகளை அடைய இது 2030 ஆம் ஆண்டிற்குள் 56% குறைய வேண்டும்.
  • உள்ளடங்கிய கார்பன் உமிழ்வுகள் காரணமாக, கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் சிமெண்ட், எஃகு மற்றும் அலுமினியம் ஆகியவை 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய உமிழ்வில் சுமார் 9% பங்களித்துள்ளன.
  • உலகளாவிய கட்டிடத் தரைப்பரப்பு 2024-ஆம் ஆண்டில் 1.7% அதிகரித்து 273 பில்லியன் சதுர மீட்டராக உயர்ந்துள்ளது, இதில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய வளர்ச்சி காணப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்