June 19 , 2021
1433 days
664
- UNESCO அறிவியல் அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- இதற்கு “race against time for smarter development” (திறன்மிகு வளர்ச்சிக்காக வேண்டி நேரத்திற்கான பந்தயம்) எனத் தலைப்பிடப் பட்டுள்ளது.
- UNESCO அறிவியல் அறிக்கையானது UNESCO அமைப்பின் ஒரு முதன்மையான அறிக்கையாகும்.
- இது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.
- இது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு (புத்தாக்கம்) ஆகியவை குறித்த ஒரு அறிக்கையாகும்.
- ஒவ்வொரு முறை வெளியிடப்படும் அறிக்கையிலும் இந்திய நாட்டிற்குத் தொடர்பான அத்தியாயம் ஒன்று அதில் இடம் பெற்றிருக்கும்.
- சமீபத்தில் வெளியான அறிக்கையிலுள்ள இந்தியா தொடர்பான அத்தியாயமானது பேராசிரியர் சுனில் மணி என்பவரால் எழுதப்பட்டது.
- இவர் திருவனந்தபுரத்திலுள்ள மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநராவார்.
Post Views:
664