TNPSC Thervupettagam
June 10 , 2025 6 days 46 0
  • யுனெஸ்கோ அமைப்பானது உலகளாவியக் கல்வி கண்காணிப்பு (GEM) அறிக்கை 2024-25 ஆனது பாலின ஏற்றத்தாழ்வுகள் குறித்த மிக கடுமையான கவலைகளை எழுப்பி உள்ளது.
  • வாசிப்புத் திறனில், குறிப்பாக நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், ஆண்கள் பெண்களை விட தொடர்ந்து பின்தங்கி வருகின்றனர்.
  • ஒவ்வொரு 100 பெண்களுக்கு 87 ஆண்கள் மட்டுமே குறைந்தபட்சத் திறன் நிலையை அடைகிறார்கள்.
  • நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்த இடைவெளி இன்னும் மிக அதிகமாக உள்ளது என்பதோடு  அங்குள்ள 100 பெண்களுக்கு 72 ஆண்கள் மட்டுமே வாசிப்புத் தரத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.
  • கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு, பிரேசில், சிலி, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள பெண்களில் ஆண்களுடன் ஒப்பிடும் போது செயல்திறனில் குறிப்பிடத்தக்கப் பின்னடைவு பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் சுமார் 189 தேசிய நிறுவனங்களில் துணைவேந்தர்கள் அல்லது இயக்குநர்கள் போன்ற உயர்பதவிகளை 5% பெண்கள் மட்டுமே வகித்தனர்.
  • உலகளவில் சுமார் 63 சதவீத நாடுகளில் மட்டுமே திறந்த (அனைவருக்குமான) மற்றும் போட்டித் தன்மை வாய்ந்த பள்ளித் தலைவர் ஆட்சேர்ப்பு செயல்முறைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்