UNESCO அமைப்பின் தலைமை இயக்குநர் ஆட்ரி அசோலே, அக்ரா (கானா) என்னுமிடத்தை 2023 ஆம் ஆண்டிற்கான UNESCO உலகப் புத்தகத் தலைநகராக அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்குத் தேர்வான குவாடலஜாரா (மெக்சிகோ) என்னுமிடத்திற்குப் பிறகு, கானா நாட்டில் இளைஞர்கள் மீதான வலுவான கவனம், கலாச்சாரம் மற்றும் அதன் செல்வச் செழிப்பிற்கு ஆற்றும் பங்கு போன்றவற்றிற்காக வேண்டி அக்ரா நகரமானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் உலகப் புத்தகத் தலைநகரங்களானது அனைத்து வயது மக்களிடையேப் புத்தகங்கள் பற்றியும் அதன் வாசிப்புப் பற்றியும் ஊக்குவிப்பினை நல்குவதற்காக வேண்டி நியமிக்கப் படுகின்றன.