October 19 , 2025
7 days
37
- 2026–2028 ஆம் காலகட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கான (UNHRC) அங்கத்துவத்திற்கு இந்தியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- 2006 ஆம் ஆண்டில் UNHRC உருவாக்கப்பட்டதிலிருந்து இந்தியா ஏழாவது முறையாக இந்தச் சபையில் உறுப்பினராக உள்ளது.
- UNHRC என்பது உலகளவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான பொறுப்பினைக் கொண்டுள்ள ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
- இது 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டது.
- இந்த சபையின் தலைமையகம் ஆனது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் அமைந்துள்ளது.
- இது ஐ.நா. பொதுச் சபையினால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
- ஐந்து பிராந்தியக் குழுக்களிடையே இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், ஒவ்வோர் உறுப்பினர் நாடும் மூன்று ஆண்டு காலத்திற்கு உறுப்பினராகச் செயல்படுகின்றன.
- இந்தியா முன்னதாக 2006–2007, 2011–2014, 2014–2017, 2017–2020, 2022–2024 மற்றும் தற்போது 2026–2028 ஆகிய காலங்களில் அதன் உறுப்பினராகச் செயல்படுகிறது.
- இந்த சபையானது உலக நாடுகளின் உரிமைகள் ஆவணங்களை மதிப்பாய்வு செய்கிறது, நிபுணர்களை நியமிக்கிறது மற்றும் உண்மை கண்டறியும் பணிகளை அங்கீகரிக்கிறது.
Post Views:
37