"Ending Child Poverty – Our Shared Imperative" என்ற SoWC (உலகில் உள்ள குழந்தைகளின் நிலை) 2025 அறிக்கையை UNICEF வெளியிட்டது.
இந்த அறிக்கை 130க்கும் மேற்பட்ட குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் தரவுகளைப் பயன்படுத்தியது.
உலகில் சுமார் 19 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான நிதியியல் வறுமையில் வாழ்கின்றனர்.
இந்த நாடுகளில் வாழும் 5 குழந்தைகளில் 1க்கும் மேற்பட்டோர் குறைந்தது இரண்டு அடிப்படைத் தேவைகளில் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
இந்தியாவில், சுமார் 206 மில்லியன் குழந்தைகள் ஒரு பற்றாக்குறையை எதிர் கொள்கின்றனர் என்ற நிலையில்மேலும் சுமார் 62 மில்லியன் குழந்தைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
குழந்தைகளிடையே மிகவும் பொதுவாக நிலவும் கடுமையான பற்றாக்குறையானது சுகாதாரம் என்று இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டது.