TNPSC Thervupettagam
April 27 , 2026 6 days 104 0
  • குண்டூர் மாநகராட்சி (GMC) 2026 ஆம் ஆண்டிற்கான 4-வது பாலின சமத்துவ அணி திரட்டல் (GEM) விருதை வென்றுள்ளது.
  • இந்த விருதினை வியன்னாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனம் (UNIDO) வழங்கியது.
  • குப்பைகளைச் சேகரிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட பெண்களை மின்சார ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணியமர்த்திய குண்டூர் மாநகராட்சியின் முன்னெடுப்பை இந்த விருது அங்கீகரித்துள்ளது.
  • சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத (பூஜ்ஜிய உமிழ்வு) கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், 'நிலையான நகரங்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறை முன்னோடித் திட்டத்தின்' (SCIAP) கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.
  • மேலும், 2025-26 ஆம் ஆண்டில் சிறந்த முறையில் சொத்துவரி வசூல் செய்ததற்காக குண்டூர் மாநகராட்சி மாநில அளவிலான பாராட்டையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்