ஐக்கிய நாடுகளின் குழந்தை இறப்பு மதிப்பீட்டிற்கான நிறுவனங்களுக்கு இடையேயான குழு (UNIGME) தனது 2025 ஆம் ஆண்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
உலகளவில், 2024 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை சுமார் 4.9 மில்லியனாகப் பதிவாகியுள்ளது; இதில் பிறந்த குழந்தைகள் மட்டும் கிட்டத்தட்ட பாதி அளவில் உள்ளனர்.
முன்கூட்டிய பிறப்புச் சிக்கல்கள், தொற்று நோய்கள், நிமோனியா, வயிற்றுப்போக்கு, மலேரியா மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை இதற்கான முக்கியமானக் காரணங்களாகும்.
இந்தியாவின் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்பு விகிதம் 26.6 (2024) ஆகவும், பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 16.7 ஆகவும் குறைந்துள்ளது என்ற நிலையில்இது குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
தடுப்பூசி செலுத்துதல், மருத்துவமனைப் பிரசவங்கள் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் தெற்காசியாவில் குழந்தை இறப்பைக் குறைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது.
இருப்பினும், பிறந்த குழந்தைகளின் இறப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளன என்ற நிலையில்நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய முன்னேற்றத்தை மேலும் வேகப்படுத்த வேண்டியது அவசியமாகும்.