ஐ.நா.வின் அமைதிகாப்புப் படையினரை பாதுகாப்பதில் உதவுவதற்காக “UNITE AWARE” எனும் தொழில்நுட்பத் தளத்தினைத் தொடங்குவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்சங்கர் அறிவித்தார்.
நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற “தொழில்நுட்பம் மற்றும் அமைதிகாப்பு” என்பது குறித்த ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஒரு உயர்நிலை விவாதத்திற்கு தலைமையேற்கையில் அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
UNITE AWARE என்பது, ஐ,நா.வின் அமைதிகாப்பு வீரர்களுக்கு நிலப்பரப்பு தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக வேண்டி இந்தியாவினால் உருவாக்கப்பட்ட கைபேசி தொழில்நுட்பத் தளமாகும்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஐ.நா.வின் அமைதிகாப்பு நடவடிக்கைகள் துறை மற்றும் நடவடிக்கை சார்ந்த ஆதரவுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.