UNSC சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான நிரந்தரமற்ற உறுப்பினர்கள்
January 8 , 2026 2 days 61 0
பஹ்ரைன், கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லாட்வியா மற்றும் லைபீரியா ஆகியவை UNSC சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இரண்டு ஆண்டு காலப் பதவிக் காலத்தைத் தொடங்கியுள்ளன.
அவை கடந்த மாதம் பதவிக் காலம் முடிந்த அல்ஜீரியா, கயானா, கொரியக் குடியரசு, சியரா லியோன் மற்றும் ஸ்லோவேனியா ஆகியவற்றிற்குப் பதிலாக இணைந்துள்ளன.
UNSC சபையில் நிரந்தரமற்ற இடங்களுக்கான தேர்தல் செயல்பாட்டில் பிராந்தியக் குழுக்கள் வேட்பாளர்களைப் பரிந்துரைக்கின்றன.
அவற்றில் நான்கு பிராந்திய குழுக்கள் உள்ளன.
UNSC 5 நிரந்தர (P5) மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
10 நிரந்தரமற்ற உறுப்பினர்களில், ஐந்து உறுப்பினர்கள் ஒவ்வோர் ஆண்டும் பொதுச் சபையால் இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.