சர்வதேச சர்ச்சைகளுக்கு / தகராறுகளுக்கு அமைதியான தீர்வு வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக தீர்மானம் 2788 என்ற தீர்மானத்தினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை (UNSC) ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.
ஐ.நா. சாசனத்தின் 33வது பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள முறைகளைத் திறம்பட பயன்படுத்துவதற்கு, பேச்சுவார்த்தை, மத்தியஸ்தம், நடுவண் மற்றும் நீதித்துறை தீர்வு ஆகியவற்றினை உள்ளடக்கிய இந்தத் தீர்மானமானது அனைத்து ஐ.நா. உறுப்பினர் நாடுகளையும் வலியுறுத்துகிறது.
சர்ச்சைகளை மிகவும் அமைதியான முறையில் தீர்ப்பதற்கான பொருத்தமான நடைமுறைகள் அல்லது சரிசெய்தல் முறைகளைப் பரிந்துரைக்கும் UNSC சபையின் அதிகாரத்தை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.