UPI–TIPS பன்னாட்டு பண வழங்கீட்டு அமைப்பின் இணைப்பு
November 26 , 2025 15 hrs 0 min 43 0
ஐரோப்பிய ஒன்றியத்தின் TARGET உடனடி பண வழங்கீட்டுத் தீர்வு (TIPS) அமைப்புடன் UPI இணைக்கப்படும் என்று RBI அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது பன்னாட்டு பண வழங்கீடுகளை மலிவானதாகவும், வேகமானதாகவும் மற்றும் மிகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்காக G20 செயல் திட்டத்தினை ஆதரிக்கிறது.
RBI மற்றும் NPCI சர்வதேசக் கொடுப்பனவுகள் லிமிடெட் (NIPL) ஆகியவை UPI–TIPS இணைப்பின் அமலாக்கக் கட்டத்தைத் தொடங்க ஐரோப்பிய மத்திய வங்கியுடன் (ECB) இணைந்து பணியாற்றியுள்ளன.
TIPS என்பது யூரோசிஸ்டம் (யூரோ பகுதியின் மத்திய வங்கிகள்) இயக்கும் உடனடி பண வழங்கீட்டு முறையாகும்.
UPI–TIPS இணைப்பு இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் எளிதான மற்றும் விரைவான பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களை செயல்படுத்த உதவும்.