UPI - உலகின் முன்னணி எண்ணிமப் பண வழங்கீட்டுத் தளம்
September 12 , 2024 329 days 336 0
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலி அல்லது UPI ஆனது, இந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூலை மாத காலக் கட்டத்தில் சுமார் 81 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியுள்ளது.
இது உலகின் முன்னணி எண்ணிமப் பண வழங்கீட்டுத் தளங்களை மிஞ்சியுள்ளது.
இந்த பரிவர்த்தனை பதிவானது வருடாந்திர வீதம் (YoY) அடிப்படையில் 37% அதிகரிப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
Paysecure எனப்படும் உலகளாவியப் பண வழங்கீட்டு மையத்தின் படி, UPI ஆனது வினாடிக்கு 3,729.1 பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது.
2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 என்ற அளவு பரிவர்த்தனைகளை விட இது 58% உயர்வாகும்.
இந்தத் தரவின் மூலம், செயலாக்கப்பட்டப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் சீனாவின் அலிபே, பேபால் மற்றும் பிரேசிலின் PIX ஆகியவற்றினை UPI விஞ்சியுள்ளது.
UPI ஆனது 2023 ஆம் ஆண்டில் 117.6 பில்லியன் பரிவர்த்தனைகளை செயல்படுத்தியது என்ற அளவில் இது உலகிலேயே மிக அதிகமாகும்.
2023-24 ஆம் ஆண்டில் 131 பில்லியனாக இருந்த UPI பரிவர்த்தனைகள் 2028-29 ஆம் ஆண்டிற்குள் 439 பில்லியனாக மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று சில அறிக்கைகள் கணித்துள்ளன.
இது அனைத்து சில்லறை எண்ணிமப் பரிவர்த்தனைகளில் 91% ஆகும்.