தெலுங்கானா மாநிலமானது, அனைத்து இந்திய மாநிலங்களிலும் அதிக தனிநபர் ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) சார்ந்த பரிவர்த்தனை செறிவினைக் கொண்டுள்ளது.
கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றில் நகர்ப்புற மையங்கள் மற்றும் பொருளாதார மையங்களால் இயக்கப்படும் அதிக UPI பயன்பாட்டுச் செறிவுகள் பதிவாகியுள்ளன.
பணத் தேவையில் ஏற்பட்ட குறைவுடன் தொடர்புடைய UPI பயன்பாட்டின் அதிகரிப்பு ஆனது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக ATM பணம் எடுத்தல் நடவடிக்கையில் நிலையான வீழ்ச்சியால் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024–25 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள பண மதிப்பு (CIC) ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.2 சதவீத பங்கைக் கொண்டிருந்தது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக UPI பரிவர்த்தனை 20 பில்லியனைத் தாண்டியது.
அளவு சார்ந்து 80% பரிவர்த்தனைகளுடன் UPI பயன்பாடு ஆனது 10 மாநிலங்களில் அதிகமாக உள்ளது.
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் பயன்பாட்டுச் செறிவு அதிகமாக உள்ளது.