இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குறிப்பிட்டச் சரி பார்க்கப்பட்ட வணிக வகைகளுக்கான UPI வரம்புகளை அதிகரித்துள்ளது.
மூலதனச் சந்தைகள், காப்பீடு மற்றும் அரசு இணையதளச் சந்தைக்கான ஒரு பரிவர்த்தனை வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.
இந்த வகைகளுக்கான 24 மணி நேர ஒட்டுமொத்தப் பரிவர்த்தனை வரம்பு தற்போது 10 லட்சம் ரூபாயாக உள்ளது என்பதோடு இது முந்தைய குறைந்தபட்ச வரம்புகளிலிருந்து அதிகரித்துள்ளது.
கடன் அட்டை சார்ந்த கொடுப்பனவுகளுக்கான வரம்பு தற்போது, ஒரு பரிவர்த்தனைக்கு 5 லட்சம் ரூபாயாகவும், UPI வழியான பரிவர்த்தனைக்கு ஒரு நாளைக்கு 6 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.
கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் EMI போன்ற வசூல்களுக்கும் ஒரு பரிவர்த்தனைக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரம்பு உள்ளது.
சரி பார்க்கப்பட்ட வணிகர்களுடனான ஒரு நபரிடமிருந்து வணிகருக்குப் பரிமாற்றப் படும் (P2M) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த வரம்புகள் பொருந்தும்; இரு நபர்களுக்கிடையேயான (P2P) பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் 1 லட்சம் ரூபாயாகவே உள்ளன.