TNPSC Thervupettagam

UPI பரிவர்த்தனை வரம்புகள்

September 10 , 2025 25 days 74 0
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குறிப்பிட்டச் சரி பார்க்கப்பட்ட வணிக வகைகளுக்கான UPI வரம்புகளை அதிகரித்துள்ளது.
  • மூலதனச் சந்தைகள், காப்பீடு மற்றும் அரசு இணையதளச் சந்தைக்கான ஒரு பரிவர்த்தனை வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.
  • இந்த வகைகளுக்கான 24 மணி நேர ஒட்டுமொத்தப் பரிவர்த்தனை வரம்பு தற்போது 10 லட்சம் ரூபாயாக உள்ளது என்பதோடு இது முந்தைய குறைந்தபட்ச வரம்புகளிலிருந்து அதிகரித்துள்ளது.
  • கடன் அட்டை சார்ந்த கொடுப்பனவுகளுக்கான வரம்பு தற்போது, ஒரு பரிவர்த்தனைக்கு 5 லட்சம் ரூபாயாகவும், UPI வழியான பரிவர்த்தனைக்கு ஒரு நாளைக்கு 6 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.
  • கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் EMI போன்ற வசூல்களுக்கும் ஒரு பரிவர்த்தனைக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரம்பு உள்ளது.
  • சரி பார்க்கப்பட்ட வணிகர்களுடனான ஒரு நபரிடமிருந்து வணிகருக்குப் பரிமாற்றப் படும் (P2M) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த வரம்புகள் பொருந்தும்; இரு நபர்களுக்கிடையேயான (P2P) பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் 1 லட்சம் ரூபாயாகவே உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்